Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் QR SCAN குறியீடு…. தலைமை பலே திட்டம்….!!!!

ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் கூடுதலாக க்யூ ஆர் ஸ்கேன் குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது. பொதுக்குழு அல்லாத உறுப்பினர்கள், வேறு ஆட்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக அதிமுக தலைமை இந்த ஏற்பாடு செய்துள்ளது.

 

Categories

Tech |