கோவை வடவள்ளியில் இபிஎஸ் ஆதரவாளராகவும், நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருக்கும் எஸ்பி வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டில் திடீர் ஐடி சோதனை நடைபெற்று வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த ஐடி ரெய்டு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதன் பின்னணியில் பாஜக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்படுகின்றன. ஏற்கனவே அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை இருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மருது அழகுராஜ் காரணமாகத்தான் தற்போது சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை நடைபெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.