Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு…. பாரம்பரிய உடைகளை அணிந்து வந்த கலெக்டர்….!!

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 7 5-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுத பெரு விழா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியான 5-வது நாளான நேற்று குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கதர் மற்றும் கைத்தறியாளான பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை, சேலை அணிந்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை ஒரு சேர பாடினர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி ஹரிதாஸ், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட துணை மாவட்ட ஆட்சியர் திருப்பதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், மகளிர் திட்ட அதிகாரி மைக்கில் பெர்னாண்டோ, தாசில்தார்கள் சுப்பிரமணியன், முருகன், கண்ணன், சேகர் மற்றும் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் என ஏராளமானோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் சேலை அணிந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சியும் நடந்துள்ளது. இதே போன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்துள்ளார். மேலும் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோரும் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி அமுத விழாவை கொண்டாடினர்.

Categories

Tech |