Categories
சினிமா

ஆர்ஆர்ஆர் படம்: இது ஓரினச்சேர்க்கையாளர்களின் கதையா?…. சர்ச்சையில் சிக்கிய ரசூல் பூக்குட்டி….!!!!!

ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஓரினச்சேர்க்கையாளர்களின் கதை என சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜ மவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் சென்ற மார்ச் 24ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திரம் போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்து இருந்தனர். இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. எனினும் இந்த படம் தென்னக சவுண்ட் டிசைனர் ரெசூலை கவரவில்லை. இத்திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகிய பின் சில எதிர்மறை விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் டுவிட்டர் பதிவர் ஒருவர், ஆர்ஆர்ஆர் என அழைக்கப்படும் குப்பைப்படத்தை 30 நிமிடங்கள் வரை பார்த்தேன் என பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஆஸ்கர்விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, தன் பாலின ஈர்ப்பாளர் குறித்த கதை என கூறினார். அவருடைய பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது இன்ஸ்டாகிராமில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த ஓரினசேர்க்கையாளர் காதல் கதைபடம் என்று குறிப்பிட்டார். அந்த படத்தில் ஆலியா பட் ஒரு முட்டுக் கட்டையாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரசூலின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அத்துடன் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தெலுங்கு ரசிகர்களும் அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு யர்லகடா தன் டுவிட்டர் பக்கத்தில் ரசூல் பூக்குட்டிக்கு அளித்த பதிலில், ஆர்ஆர்ஆர் தனது பாலின ஈர்ப்பாளர் குறித்த படம் என நான் நினைக்கவில்லை. அவ்வாறு இருந்தாலும் அது ஒரு மோசமான விஷயமா..? இதனை எவ்வாறு நீங்கள் நியாயப்படுத்த முடியும்.? உங்களை போன்ற ஒருவர் மிகவும் தாழ்ந்துபோனதில் மிகுந்த வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார். இதற்கு பதில்கூறிய ரசூல் பூக்குட்டி, முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். அவ்வாறு இருந்தாலும் அது தவறில்லை. நான் என் நண்பருக்கு பதில் அளித்தேன். அதுமட்டுமின்றி பொது வெளியில் பேசப்படுவதைத்தான் நானும் தெரிவித்து இருந்தேன். இதை நீங்கள் இவ்வளவு கவலைக்குரியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |