Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“லிப்ட் சரியா வொர்க் ஆகல” அடித்து உதைத்த ஸ்விக்கி டெலிவரி பாய்…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை அடுத்த பெருகம்பாக்கத்தில் ஒரு தனியார் குடியிருப்பில் வளாகத்தில் 500 குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி பாய் ஒருவர் சம்பவத்தன்று உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட் சரிவர இயங்காததால் எமர்ஜென்சியை டெலிவரி பாய் அழுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வெளியில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஒடிசாவை சேர்ந்த 33 வயதான பிரதீப் குமார் ராவத் லிப்ட்டை சீக்கிரம் திறக்கவில்லை என்பதால் டெலிவரி பாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின் அங்கிருந்து சென்ற அவர் தன்னுடைய நண்பர்களோடு சம்பவ இடத்திற்கு வந்து காவலாளிகை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் தனியார் குடியிருப்பு காவலாளியை தனது நண்பர்களுடன் வந்து தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |