உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவது மட்டுமல்லாமல் மக்களும் பாதிக்கப்படுகின்றன. அதனால் தற்காலிகமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதை யாரும் பொருட்படுத்தாமல் விசேஷ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து வருவதால் நகர் மாசுபடுவது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி இனி பட்டாசு வெடித்தால் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.