தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவது போல விளையாட்டுகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த செயலியின் மூலமாக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டியின் விவரங்கள், பயிற்சி முகாம் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் டிஎன் ஸ்போர்ட்ஸ் செயலி மூலமாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் அதற்கான சான்றிதழ்கள் டிஜிட் லாக்கர் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களையும் பெறுவதற்கு, மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கும், தங்களது விவரங்களை டிஎன் ஸ்போர்ட் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் இணைய விரும்பும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் https://www.tnsports.org.in/webapp/login.aspx என்கின்ற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்று மயிலாடுதுறை ஆட்சி தலைவர் லலிதா தெரிவித்துள்ளார்.