ஓய்வூதிய உயர்வு, ஓய்வூதிய நிலவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதிய நிலுவைத் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகளை கட்டுமான தொழிற்சங்கத்தினர் வைத்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைனில் பதிவு புதுப்பித்தல் கேட்டு மனுக்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் நேரடியாக நலவாரியத்தில் புதுப்பித்தலை தொடங்க வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகள் பரிசீரிசினை செய்யப்பட்டு உரிய பண பலன்களை வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.