Categories
தேசிய செய்திகள்

உங்கள் உடலில் இருந்து தலையை எடுக்கணுமா?… இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல்….!!!!

கவிஞர் மற்றும் இயக்குநருமான லீனா மணி மேகலை ஆவணப்படங்களை தயாரித்து இருக்கிறார். அதாவது மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கனடாவிலுள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கவின்கலை பயின்று வரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின் கீழ் காளி தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளிவேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது இந்துக்கள் வணங்கும் காளி தெய்வத்தை இழிவுப் படுத்துவதாக கூறி கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

பின் அரெஸ்ட் லீனா எனும் ஹேஷ்டாக்கானது வைரலாகியது. அதனை தொடர்ந்து வினிஜிண்டால் என்ற வழக்கறிஞர் டெல்லி காவல் நிலையத்தில் லீனா மீது புகார் கொடுத்துள்ளார். இதேப்போன்று நெல்லை உள்ளிட்ட நாடு முழுதும் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து லீனாவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் லீனாவுக்கு எதிராக டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போஸ்டர் தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள லீனா, ஒரு மாலைப் பொழுதில் கனடாவின் டொரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்கள்தான் காளி ஆவணப்படம். இந்த படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாமல் “love you leena manimekalai” hashtag போடுவாங்க.

தனக்கு இழப்பதற்கென்று ஒன்றும் இல்லை. இருக்கும்வரை எதற்கும் அஞ்சாமல், நம்புவதைப் பேசும் குரலோடு இருக்க விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் எனில் அதையும் தரலாம்” என கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் லீனாவுக்கு எதிராக நடிகையும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான குஷ்பு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து குஷ்பு கூறியபோது “படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே படைப்பாளிகள் கடவுளை இவ்வாறு சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையான கண்டனங்களுக்குரியது என கூறியுள்ளார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ஹனுமான் கோயிலில் சாமியார் ராஜூதாஸ் மகாந்த் என்பவர் லீனா மணிமேகலையை மிரட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், சமிபத்திய நிகழ்வுகளை பாருங்கள். நுபுர்சர்மா சரியான விஷயங்களை கூறியபோதும் அவரது கருத்து என்பது இந்தியா, உலகம் முழுதும் நெருப்பை கிளப்பி இருக்கிறது. நீங்கள் சனாதன தர்மத்தினை அவமதிக்க விரும்புகிறீர்களா..?. உங்கள் தலையை உடலில் இருந்து பிரிக்க விருப்பபடுகிறீர்களா..? இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு கடுமையான  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடினமான சூழல் ஏற்படுத்தப்படும்” என கூறியுள்ளார்.

 

Categories

Tech |