எல் சால்வடார் நாட்டில் கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இந்த நாட்டில் 19 வயதான லெஸ்ஸி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லெஸ்ஸி 5 மாத கர்ப்பிணி ஆக இருந்துள்ளார். இவர் கழிவறைக்கு சென்ற போது திடீரென குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையானது கருசிதைவின் காரணமாக பிறந்ததால் லெஸ்ஸி தொப்புள் கொடியை தானே அறுத்துள்ளார். அதன் பிறகு லெஸ்ஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லெஸ்ஸிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
அவர்கள் லெஸ்ஸி தனக்கு பிறந்த குழந்தையை 6 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக லெஸ்ஸி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் லெஸ்ஸிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.