Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்… பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் பலி…!!!

கனடா நாட்டில் பேருந்தில் ஒரு நபரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண் மீது திராவகம் வீசிய மர்ம நபர், தீ வைத்து எரித்தார். இச்சம்பவம் சக பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் 33 வயதுடைய ஒரு நபர் கைதானார்.

பெண்கள் மீது தாக்குதல், கொலை முயற்சி போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. வெறுப்புணர்வு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |