Categories
Tech டெக்னாலஜி

“அடடே இது வேற லெவல்”…. காய்ச்சலை கண்டறியும் ஆப்பிள் வாட்ச்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொதுவாக ஆப்பிள் சாதனங்கள் என்றாலே நிச்சயம் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதன்படி ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈசிஜி கண்டறிதல் அம்சங்களுடன் பலமுறை உயிர்காக்கும் தன்மையை ஆப்பிள் வாட்ச் நிரூபித்துள்ளது. தற்போது ஆப்பிள் வாட்ச் அணிந்தவர்களுக்கு விரைவில் காய்ச்சல் வரப்போகிறது என்று எச்சரிப்பதன் மூலமாக இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் வாட்ச் 8 சீரிசை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 3 வேரியண்டுகளில் வெளியாகும் இந்த ஸ்மார்ட் வாட்சில் வெப்ப அளவை அளவிடும் சென்சார் இடம் பெற்றுள்ளது. இது பயனரின் உடல் வெப்பநிலையை ஆராய்ந்து அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா என கண்டுபிடித்து கூறும். மேலும் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் மருத்துவரை அணுக சொல்லி எச்சரிக்கையும் விடுக்கும். இந்த அம்சம் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |