Categories
உலக செய்திகள்

நேட்டோ அமைப்பில் இணைய… பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கனடா ஆதரவு…!!!

ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர முதல் நாடாக கனடா ஆதரவு தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டிற்குள் திடீரென்று நுழைந்த ரஷ்யபடைகள் அங்கு நான்கு மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கும் அவ்வாறான நிலை உண்டாகலாம் என்று ஸ்வீடன் மற்றும் பில்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர தீர்மானித்தன. எனினும் அதற்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் 30 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அப்போது தான், நேட்டோ அமைப்பில் எந்த ஒரு நாடும் இணைய முடியும். அவ்வாறு நேட்டோ  அமைப்பில் இணையும் பட்சத்தில் அவ்வமைப்பில் உள்ள ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் நேட்டோ அமைப்பின் மொத்த நாடுகளும் ஒன்று சேர்ந்து பாதுகாப்பு அளிக்கும்.

அதாவது, நேட்டோ அமைப்பின் ஒரு நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் அவ்வமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தையும் தாக்குவதற்கு சமம் என்ற கொள்கை இருக்கிறது. இந்நிலையில், சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைய முதல் நாடாக கனடா ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்கிறது.

கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவ்விரு நாடுகளும் நேட்டோ அமைப்பில் சேர ஆதரவளித்து ஒரே மனதுடன் வாக்களித்திருக்கிறார்கள். இது பற்றி கனடா அதிபர் ஜஸ்டின் ட்ருட்டோ தெரிவித்ததாவது, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோ அமைப்புடன் திறம்பட ஒன்றிணைந்து இவ்வமைப்பிற்கான பாதுகாப்பிற்கு பங்களிக்கும் என்று கனடா முழுமையாக நம்புகிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |