உக்ரைனில் இருந்து அகதியாகவந்த ஒரு அழகிய இளம்பெண்ணுக்காக 10 வருடங்கள் உடன் வாழ்ந்து 2 மகள்களையும் பெற்றுக்கொடுத்த மனைவியைக் கைவிட்டார் ஒரு பிரித்தானியர்.
உக்ரைனில் இருந்து அகதிகளாக வருவோருக்காக பிரித்தானியர்கள் தங்களது வீடுகளில் இடமளிக்க முன்வந்த சூழ்நிலையில், டோனி (Tony Garnett 29), லோர்னா (Lorna 28) என்ற தம்பதியினர், சோபியா (Sofiia Karkadym 22) என்ற உக்ரைனிய இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடமளித்தார்கள். இந்நிலையில் டோனிக்கும், அப்பெண்ணுக்கும் காதல் பற்றிக் கொண்டது. 10 வருடங்கள் தம்பதியினர் சேர்ந்து வாழ்ந்து 2 பிள்ளைகளை பெற்றெடுத்தனர். இந்த நிலையில் சோபியா குடும்பத்துக்குள் வந்ததை அடுத்து 10 நாட்களில் சோபியாவுக்கும், லோர்னாவுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது.
இதனால் கோபித்துக்கொண்டு சோபியா வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் லோர்னா எதிர்பார்க்காத வகையில் சோபியாவுடன், டோனியும் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். இருவரும் இப்போது வாடகைவீடு ஒன்றில் வாழும் சூழ்நிலையில், தன் கணவரை தன்னிடம் இருந்து சோபியா பிரித்து விட்டார் என்று குற்றம்சாட்டுகிறார் லோர்னா. இந்த விடயம் அறிந்த மக்களும் சோபியாவை கரித்துக்கொட்டுவதுடன், அவரை நாடுகடத்த வேண்டும் என்கிறார்களாம்.
எனினும் உண்மை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தான் தெரியும் என கூறும் டோனி, முன்பே தங்களது இருவருக்கும் இடையில் பிரச்சினை இருந்தது எனவும் சோபியா ஒரு அகதியாக வந்து இருப்பதால் அவருக்கு ஏராளம் அச்சுறுத்தல்கள் வருகிறது எனவும் அவரை பாதுகாக்கும் கடமை தனக்கு இருப்பதாகவும் கூறினார். முன் தனக்கு சரியான தூக்கம்கூட இன்றி அவதியுற்ற சூழ்நிலையில், தற்போது தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் டோனி கூறுகிறார். டோனியும், லோர்னாவும் கடந்த 2014 முதல் சேர்ந்து வாழ்ந்தாலும், இதுவரையிலும் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.