தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியலில் கஷ்டப்பட்டு தலைவராக இருக்க வேண்டும். வேரிலிருந்து அரசியலை பார்த்து, கற்று, ஏழை மக்களிடம் வாழ்ந்து, படிப்படியாக மேலே வந்தவர் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாக இருக்கட்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாக இருக்கட்டும்.யாருமே தங்கத்தட்டில் வந்து அரசியல் கட்சியை நடத்தவில்லை, அதற்கான காலம் தமிழகத்தில் வரும். இப்படி சொன்னதும் கோச்சிப்பார்கள், அது எப்படி வரும் என்று ?
சிவசேனா வேறு, டிஎம்கே வேறு ? இரண்டும் வேறா என்பதை பார்ப்போம். பால சாஹேப் கேஷவ் தாக்கரே அவர்களுடைய முதல் மகன் பிந்து தாக்கரே…. அவர் சினிமாவில் சென்று நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசை, ஆனால் சினிமாவிலேயே சென்று நடித்த பார்த்தார் எந்த படமும் ஓடவில்லை….
கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகனின் பெயர் மு.க. முத்து அவரும் சினிமா துறையில் சென்று நடிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார். அவருக்கும் நடிப்பு சோடையாகவில்லை. பால சாஹேப் கேஷவ் தாக்கரே அவருடைய இரண்டாவது மகன் ஜெயதேவ் தாக்கரே குடும்பத்திலிருந்து விலகி இருக்கின்றார். தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முன்னாள் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவருடைய இரண்டாவது மகன் மு.க. அழகிரி அவர்கள் குடும்பத்தில் இருந்து வெளியே இருக்கின்றார்.
பால சாஹேப் கேஷவ் தாக்கரே அவருடைய மூன்றாவது மகன் உதவ் தாக்கரே அவர்கள் மகாராஷ்டிராவினுடைய முதலமைச்சராக வாய்ப்பு கிடைத்தது, தமிழ்நாட்டிலே கலைஞர் மு. கருணாநிதி அவருடைய மூன்றாவது மகன் திரு ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாட்டிலே முதலமைச்சராக வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் இயற்கை ஏற்படுத்தக்கூடிய சூழல், சாதாரண மனிதர்கள் எல்லாம் செய்ய முடியாது.
உதவ் தாக்கரே அவருடைய மகன் ஆதித்ய தாக்கரே அவர்களுக்கு அரசியல் ஆசை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்…. சிவசேனாவினுடைய இளைஞர் அணி உடைய தலைவர் அங்கே. அதேபோல இங்கே முதலமைச்சருடைய மகனுக்கு அரசியல் ஆசை இளைஞர் அணியின் உடைய தலைவர். அமைச்சரவைகுள்ளே கொண்டு வரப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டார்.
இங்கே அமைச்சரவை மாற்றுவதற்காக தமிழகம் தயாராக இருக்கிறது. இங்கே ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவதற்காக, எப்படி அமைந்திருக்கிறது என்று பாருங்கள், சரித்திரம் எப்படி கைகூடி வருகிறது, கண் முன்னால் நடக்கிறது என்று. இது சரித்திர உண்மை மூன்றாவது மகன், இரண்டாவது மகன் வெளியே, முதல் மகன் சினிமாவுக்குள்ளே சென்று சூடை போகவில்லை இதைஅனைத்தையும் கண்முன்னால் பார்க்கிறோம் அதுதான் நடந்திருக்கிறது என தெரிவித்தார்.