ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் பல நாடுகளில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. ஏனெனில் உக்ரைனுக்கு சொந்தமான கருங்கடல் துறைமுகத்திலிருந்து தான் 15 சதவீதம் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த துறைமுகத்தை போரின்போது ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்ததால் தானிய ஏற்றுமதியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கருங்கடல் துறைமுகத்திலிருந்து ரஷ்யா தானியங்களை கடத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் பலமுறை குற்றம் சுமத்தினர். இது தொடர்பாக துருக்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பல் தற்போது துருக்கி அதிகாரிகளிடம் வசமாக சிக்கியது. அதில் 7000 டன் தானியங்கள் இருந்தது. இது குறித்த அந்நாட்டின் வெளி விவகார அமைச்சகம் மேற்கொண்ட விசாரணையில் சரக்கு கப்பல் ரஷ்யாவிற்கு சொந்தமானது என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து உக்ரைனில் இருந்து கடத்தப்படும் தானியங்களை ரஷ்யா கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த ரஷ்ய அதிகாரிகள் சரக்கு கப்பலில் இருந்தது உக்ரைனிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தானியங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் உக்ரைன் ரஷ்யா தானியங்களை கடத்தியதாக துருக்கி அதிகாரிகளிடம் கூறியுள்ளது. மேலும் தானியங்கள் தொடர்பாக துருக்கி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.