Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“108 ஆம்புலன்ஸ் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்”…. தொழிலாளர்கள் முடிவு….!!!!!

108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகளை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாத கலந்தாய்வுக் கூட்டமானது பெரம்பலூரில் நடைபெற்றதில் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். இந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சங்கத்தின் மாநாடு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடத்தப்படுகின்ற நிலையில் ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுடன் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் அதை கண்டித்து மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதில் மூன்று மாவட்டங்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்களை இயக்குவதற்கு பொதுமக்களுடன் நல்லுறவு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத செயலில் ஈடுபடும் சங்க பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் மாநில தலைமை முன்னெடுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |