Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-டிப்பர் லாரி மோதல்…. படுகாயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியூர்கல்மேடு பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பெருந்தை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குரால்நத்தம் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் துரைமுருகன், தனியார் பேருந்தின் ஓட்டுநர் மணிகண்டன், கண்டக்டர் செங்கோட்டையன், பயணிகள் செல்லம்மாள், செந்தில்குமார், மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |