Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அம்மி கல்லை போட்டு கொன்ற தொழிலாளி…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு…!!

பெண்ணின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் இறந்து விட்டதால் பழனியம்மாள் காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாளுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான மாது(37) என்பவருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது மாது பழனியம்மாளை தாக்கியுள்ளார்.

மேலும் அம்மிக்கல்லை எடுத்து பழனியம்மாளின் தலையில் போட்டுவிட்டு மாது அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மாதுவை தேடி வந்தனர். நேற்று காஞ்சேரி காட்டில் பதுங்கியிருந்த மாதுவை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |