Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மாஸ்டர்….. ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் கிராமத்தில் ஆனந்த்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெனி என்ற மகன் மருமகன் உள்ளார். இவர்கள் துறவிகாடு சாலையில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலில் முத்தரசு என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் நடத்தி வந்தவர்களுக்கும், முத்தரசுவுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்தரசு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்தரசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தரசு பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து முத்தரசுவை தற்கொலைக்கு தூண்டியதாக ஆனந்த் மற்றும் ரெனி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலீசார் ஆனந்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரெனியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |