Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த விவசாயி…. தஞ்சையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓட்டங்காடு கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான முத்துகிருஷ்ணன்(42) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை முத்துகிருஷ்ணன் தனது நண்பரான அரசமாணிக்கம்(57) என்பவருடன் சொந்த வேலை காரணமாக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர்கள் கொண்டிக்குளம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் கிடங்கிற்கு அரசி லோடு ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துகிருஷ்ணன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அரசமாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரான முனியாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |