மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூரில் பிரகாஷ்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பரான பரத்(21) என்பவருடன் பஞ்சப்பூர் அருகே இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை இரண்டு வாலிபர்களும் கடத்தி வந்தனர்.
பிறகு அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து மாணவியை மிரட்டியுள்ளனர். மேலும் அந்த வீடியோவை சிலருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மாணவியின் தாயார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.