Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு 2விஷயத்தில் ஆபத்து இருக்கு ? ஷாக் கொடுத்த எச்.ராஜா…. அதட்டி பார்க்கும் தமிழக பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இரண்டு, மூன்று விஷயங்கள் ஸ்டாலினுக்கு ஆபத்து. ஆர்.ராசா தமிழ்நாடு தனி நாடாக மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆர் ராசா மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் ஆர் ராசா பேசியது அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும். அப்படி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் ? 1991-ல் பார்லிமெண்ட்டையே சந்திக்காதா லேம் டக் ப்ரைம் மினிஸ்டர் சந்திரசேகர் திமுக அரசை டிஸ்மிஸ் பண்ணாரு. அதே மாதிரி அரசாங்கத்தை டிஸ்மிஸ் பண்ணலாம்.

356 பயன்படுத்தத் கவர்னர் அறிக்கை வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆக நீங்கள் இருக்கும்போது தனி தமிழ்நாடு கோரிக்கை வைத்த ஆ. ராசாவை நீங்களே கைது செய்கிறீர்களா இல்ல….  நீங்களும் சேர்ந்து போகிறீர்களா, ஊ சொல்றியா இல்ல ஊ ஊ சொல்றியா அப்படி என்ன கேட்க வேண்டியதாக இருக்கிறது.

தொடர்ந்து பேசிய எச்.ராஜா, இரண்டாவதாக  கிரிமினல் பாதிரியார் ஜெகத் கஸ்பர். இவர் ஏற்கனவே கிரிமினல். ஐநாவில் இவருக்கு எதிராக புகார் இருக்கிறது. இவர் சொல்கிறார் முஸ்லிம்கள் 40 சதவீத இடம் கேளு அப்படி என்று…. இன்றைக்கு என்னமோ நான் பிரிவினை பேசவில்லை என்று சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது… ஆனால் மண்டையில் நாங்கள் ஓங்கி அடிக்கவில்லை அதுக்குள்ள இவ்வளவு அலறுகிறார்கள்.

இந்த ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும். என்று ஏற்கனவே கேட்டிருக்கிறேன், ஜெகத் கஸ்பரை கைது இன்னும் செய்யவில்லை. அப்படி என்றால் ஸ்டாலின் உடந்தை, ஸ்டாலின் சொல்லி ஜெகத் கஸ்பர்  பேசி இருக்கிறார் என்று மக்கள் சொல்கிறார். ஏன் சார் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவருக்கு முன்னாடி தானே சொல்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.

ஏனென்றால் ஏற்கனவே நான் 38 அமைப்புகள் ( அர்பன் நக்ஸல்ஸ்)  முஸ்லிம் ஜிகாதிஸ்ட், ஜெகத் கஸ்பர்  மாதிரி தனி நபர்களாக ( நாட்டு எதிரானவர்கள் ) என லிஸ்ட் மாண்புமிகு அமித்ஷா அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளேன் என தெரிவித்தார்.

Categories

Tech |