ஈபிள் டவருக்கு பெயிண்ட் வேலை செய்ய ரூபாய் 2200 கோடி செலவாகும்.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஈபிள் டவர் (Eiffel Tower)உள்ளது. உலகில் மிகவும் பிரம்மாண்டமான அழகான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஈபிள் டவரின் அழகை பார்த்து ரசிக்க ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளிலிருந்து ஏறக்குறைய 60 லட்சம் மக்கள் வருகின்றனர். இருப்பினும் இரும்பாலான அந்த வானளாவிய கோபுரம் இப்போது துருபிடித்து காணப்படுகிறது. அதனால் ஈபில் டவருக்கு விரிவான பழுதுபார்ப்பு தேவைப்படுகிறது. ஆனால் அவ்வாறு பழுதுபார்ப்பதற்கு பதிலாக, இது இலங்கையின் பண மதிப்பில் சுமார் ரூபாய் 2200 கோடி (60 மில்லியன் யூரோ) செலவில் பெயிண்ட் வேலை செய்யப்படவுள்ளது. இதுவும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் முழுவதுமாக பெயிண்ட் வேலை செய்யப்படவுள்ளது.
இந்த ஈபிள் டவர், 324 மீட்டர் (1,063 அடி) உயரமான கோபுரம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் (Gustave Eiffel) என்பவரால் கட்டப்பட்டது. இந்த ஈபிள் டவர் ஒலிம்பிக்கிற்கு தயாராகும் வகையில் அதன் 20-வது வண்ணப்பூச்சு வேலை செய்யப்படுகின்றது. இந்த ஈபிள் டவரில் 5 % மட்டுமே சரிசெய்யப்படும். ஏனெனில் முந்தைய வண்ணப்பூச்சின் ஈயம் மற்றும் கோவிட் காரணமாக ஏற்பட்ட தாமதங்கள் 30 % அகற்றப்பட்டு இரண்டு புதிய கோட்டுகளை வழங்குவதைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருவாய் இழப்பு காரணமாக, ஈபிள் டவர் மோசமான நிலையில் இருந்தபோதிலும், டவரை நீண்ட காலத்திற்கு மூடுவதற்கு Societe d’Explitation de la Tour Eiffel (SETE) நிறுவனம் தயங்குவதாகக் கூறப்படுகிறது.