செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய மக்கள் விரோத விடியா ஆட்சியை கண்டித்து உண்ணாவிரதமானது பாரதிய ஜனதா கட்சியானது நடத்திக் கொண்டிருக்கிறது, இதற்கு முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம், சென்னையில் மிகப் பெரிய போராட்டம். அதற்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம், இன்றைக்கு ஒரு நாள் உண்ணாவிரதம். ஆனால் ராத்திரியில் போராட்டம் நடத்த இந்த விடியா அரசு அனுமதி இல்லை என்கிறார்கள்.
நாங்கள் அனுமதிக்கவில்லை என்றால் முதலமைச்சரே இல்லை என்கிறேன் நான், இதையெல்லாம் டூமச் undemocrity. இப்போது திமுக என்ன சொல்கிறது தேர்தல் அறிக்கையில்…. பெட்ரோலுக்கு 5 ரூபா, டீசலுக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று குறைத்தீர்களா? இல்லை. நாங்க என்ன சொல்கிறோம் அதற்கு மேல் ஒரு பைசா கூட குறைக்க வேண்டாம் சொன்னதே முதலில் குறையுங்கள்.
ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி பெட்ரோலுக்கு 9 ரூபாய், டீசலுக்கு 8 ரூபாய் குறைத்திருக்கிறோம். கலால் வரியை குறைத்து நாடு முழுவதும் நாங்கள் சொல்லவில்லை, ஆனால் நிதி மந்திரி என்ன சொல்கிறார் அதெல்லாம் முடியாது காசு இல்லை, கொடுக்க முடியாது என்று….. பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் பென்ஷன், கேட்டால் தகுதியுள்ள பெண்களை தேடுகிறார்களாம்.
இது என்ன சுப வீரபாண்டியன் மாதிரியா திருமணம் கடந்த உறவா வீட்டிற்கு ஒன்றுதானே எல்லாருக்கும் இருக்கிறது, அவருக்கு என்ன சுப வீரபாண்டியன் தலையெழுத்து காரைக்குடிகாரன் கேடு கெட்டவன் என்று….. திருமணம் கடந்த உறவு என்றால் அந்த இரண்டு பேரில் யாரு தகுதியானவர் ? அதை யோசிக்கலாம். மீதி எல்லாரும் ஒன்றுதான ஏன் கொடுக்கவில்லை என விமர்சித்தார்.