இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக இலுப்பூர் காவல்நிலையத்தில் வாகனத்தை பறிகொடுத்த கணேசன் (60) மற்றும் சாதிக் பாட்ஷா (44) ஆகிய 2 பேரும் தனித்தனியே புகார் கொடுத்திருந்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மேடுகாடுபட்டி பகுதியில் ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தை திருடும்போது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனையடுத்து பிடிபட்ட வாலிபரை பொதுமக்கள் இலுப்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 4 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு கார்த்திகேயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.