பிரபல நாட்டில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்ததால் அதிபர் பெரும் சிக்கலில் இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் பழமை வாத கட்சியானது ஆட்சியில் இருக்கிறது. இங்கு அதிபராக போரிஸ் ஜான்சன் இருக்கிறார். கடந்த புதன் கிழமை இரவு நேர பார்ட்டியின் போது 2 ஆண்களிடம் எம்பி கிரிஸ் பாலியல் ரீதியாக அநாகரிகமான செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக எம்.பி பதவியில் இருந்து கிறிஸ் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் மற்றும் நிதி மந்திரி ரிஷிக் சுனக் ஆகியோரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் குடும்ப நல மந்திரி வில், சட்டத்துறை மந்திரி லாரா டிராட் ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்ததால் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அதிபர் போரிஸ் ஜான்சன் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.