Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர…. “இதுவரை ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்”…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவோ அல்லது தாங்கலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மாவட்டத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வரை பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும்.

மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |