Categories
தேசிய செய்திகள்

ALERT: கர்நாடகா கடலோர மாவட்டங்களில் மிககனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

கர்நாடகா நாட்டின் கடலோர மற்றும் மல்நாடு பகுதிகளில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. அத்துடன் ஆறுகள் பெருக்கெடுத்து விவசாய வயல்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனிடையில் மங்களூருவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து கடலோர கர்நாடகாவிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்பவர்களை தற்காலிகமாக (அல்லது) நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டுமா என்பதை ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் துணை ஆணையர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனே மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |