Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை: இவ்வளவு ரூபாய் குறைத்திடுங்கள்?…. உற்பத்தியாளர்கள் சொன்ன குட் நியூஸ்….!!!!

இந்தியாவானது தன்னுடைய சமையல் எண்ணெய்யின் தேவையில் 60 % இறக்குமதி செய்கிறது. சென்றசில மாதங்களாக சர்வதேசசந்தையில் விலை அதிகரித்ததால் இந்தியாவில் அதன் சில்லரை விலையும் உயர்ந்தது. எனினும் அண்மை காலமாக அந்த சந்தையில் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சென்ற மாதம் லிட்டருக்கு ரூபாய் 10 -ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன்பின்பும் விலையானது குறைந்துள்ளதால், அது தொடர்பாக விவாதிப்பதற்கு மத்தியஉணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பெரும் உற்பத்தியாளர்கள் கூட்டத்தை நேற்று கூட்டினார். இதையடுத்து அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலையானது 10 % குறைந்து இருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு வலியுறுத்தினோம்.

மேலும் விலையை 10 ரூபாய் குறைக்கும்படி தெரிவித்தோம். அதற்கு பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் ஆகிய இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூபாய் 10 குறைப்பதாக உறுதியளித்தனர். இந்த எண்ணெய்களின் விலையானது குறைந்து இருப்பதால், பிற சமையல் எண்ணெய்களின் விலையும் குறைந்துவிடும். அத்துடன் ஒரே கம்பெனியின் சமையல் எண்ணெய் விலை, வெவ்வேறு மண்டலங்களில் ரூபாய் 3 – ரூபாய் 5 வரை வேறுபாடாகவுள்ளது. ஆகவே நாடு முழுதும் ஒரேமாதிரி விலையை நிர்ணயிக்குமாறு கூறினோம். அதன்படி அவர்களும் ஒப்புக் கொண்டனர்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |