Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு… குழந்தைகளின் ருசிக்கு…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அந்த இனிப்பு வகையில் இன்று ராகி இனிப்பு குழிப்பணியாரம் செய்வது பற்றி தொகுப்பு

தேவையான பொருள்:

கேழ்வரகு                       –          1 கப்

பச்சரிசி                             –          1 கப்

வெல்லம்                        –          200 கிராம்

உளுந்து                            –          1 கப்

இட்லி அரிசி                   –          1 கப்

தேங்காய்த்துருவல்   –           5 டீஸ்பூன்

எண்ணெய்                      –           தேவையான அளவு

உப்பு                                   –           தேவைக்கேற்ப

செய்முறை

இட்லி அரிசி, பச்சரிசி, கேழ்வரகு  மூன்றையும் ஒன்றாக  தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற  வைக்கவும்.

உளுந்தை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

முதலில் அரிசியையும் ராகியையும் அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஊற  வைத்துள்ள உளுந்தை நன்றாக அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக கிளறவும்.

மாவு நன்றாக புளிக்க 6 மணி நேரம் காத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரில் வெல்லத்தை கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.

அந்த பாகையை தேங்காய் துருவலுடன் சேர்த்து மாவில் ஊற்றி நன்றாக கிளறவும்.

இறுதியாக குழிப்பணியாரக் கல்லை நெருப்பில் வைத்து சூடானதும் குழிகளிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மாவினை  முக்கால் பாகம் குழிகளில் ஊற்றி  இரண்டு புறமும் செந்நிறமாக  வரவும் எடுத்துவிடவும்.

சுவை மற்றும் ஆரோக்யம் நிறைந்த ராகி குழிப்பணியாரம் தயார்…!!

 

கேழ்வரகின் நன்மைகள்

குழந்தைகளின் உடல் நலமாக இருக்க அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பெற தேவையான ஒரு சத்து நிறைந்த பொருள் என்றால் கேழ்வரகு முதல் இடம் வகிக்கின்றது.

உடல் செரிமானத்திற்கு உதவி புரியும் நார்ச்சத்து கேழ்வரகில் அதிகம் உள்ளது.

உடலில் எலும்புகள் வலுப்பெற கால்சியமானது கேழ்வரகில் நிறைந்துள்ளது.

உடல் எடை குறைக்க கேழ்வரகில் செய்த உணவுகளை உண்டு வந்தாலே போதுமானது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |