Categories
உலக செய்திகள்

உக்ரைனிய ராணுவ படைகளின் அதிரடி நடவடிக்கையால்…. நிலை குலைந்த ரஷ்ய ராணுவம்…. 200 ரஷ்ய வீரர்கள் பலி….!!

ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய இராணுவ வசதிகள் மீது உக்ரைனிய இராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தற்போது கவனம் செலுத்தி வரும் ரஷ்ய இராணுவ படைகள், டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனிய படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ரஷ்ய இராாணுவ படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன்மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைனிய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வெளிவந்துள்ள முதல்நிலை அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைனிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 300 ரஷ்ய வீரர்கள் வரை படுகாயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைனிய படைகளின் தாக்குதலை கருத்தில் கொண்டு Melitopol-லில் உள்ள ரஷ்ய கூட்டுப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை தொடர பயப்படுகிறார்கள் என அந்த பகுதியின் மேயர் Ivan Fedorov  தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |