ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் சீரமைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தங்கும் விடுதி, கடைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
இதனால் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்துகள் நிற்கும் வகையில் சோலார் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.