மகன் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான அப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சஞ்சய் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்புசாமி கவலையடைந்தார். மேலும் தனது மகன் சஞ்சயை மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்காக அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு டியூஷன் சென்டரில் பணம் கட்டி சேர்த்து விட்டார்.
ஆனால் சஞ்சய் சரியாக வகுப்புக்கு செல்லவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து அப்புசாமி கடந்த 1-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அப்புசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அப்புசாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.