தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகின்ற ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 1, ஊராட்சி மன்ற தலைவர் பதவி 4, கிராம வார்டு உறுப்பினர் பதவி 26 என மொத்தம் 31 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை அடுத்து வருகின்ற ஜூலை 9ஆம் தேதி வாக்குப்பதிவும் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இன்று அதாவது ஜூன் ஏழாம் தேதி காலை 10 மணி முதல் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை,வாக்கு எண்ணிக்கை நடக்கும் 12 ஆம் தேதியும் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு என்னும் மையங்களில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்றும் அரசின் உத்தரவை மீறி திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது