சாலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தனியார் மல்லிகை பொருட்கள் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு வடுகபாளையம் சாலையில் சரக்கு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து ஓட்டுநர் பிரகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை அங்கிருந்து அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.