Categories
தேசிய செய்திகள்

இனி ஒரே ஒரு நம்பரில் தீர்வு…. ரயில் பயணிகளுக்கு அசத்தலான வசதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்வதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில்களில் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும் என்பதாலும் நிறைய வசதிகள் இருப்பதாலும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது ரயில் தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கு பயணிகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதனைப் போலவே ரயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. IRCTCஇது போன்ற பிரச்சனைகளில் இருந்து பயணிகளுக்கு நிவாரணம் அளித்துள்ளது. அதாவது ஐ ஆர் சி டி சி தனது பயணிகளுக்காக ஒரு புதிய வசதியை தொடங்கியுள்ளது. அதாவது பயணிகள் இந்திய ரயில்வே தொடர்பான எந்த ஒரு தகவலையும் ஒரே ஒரு நம்பர் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.

ரயில்  பயணத்தின் போது ஏதாவது தகவல் அல்லது புகார்களுக்கு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பரை பயணிகள் தொடர்பு கொள்ளலாம். இந்த நம்பருக்கு அழைப்பதன் மூலம் பாதுகாப்பு,மருத்துவ உதவி மற்றும் விபத்து பற்றிய தகவல்களை பயணிகள் எளிதில் பெறலாம். இதனைத் தவிர ரயில், ரயில் நிலையம் தொடர்பான புகார்கள், விஜிலென்ஸ் தகவல், பார்சல் விசாரணை,பொது தகவல் மற்றும் புகார் நடவடிக்கை நிலை போன்ற வசதிகளும் இதன் மூலமாக பயணிகளுக்கு கிடைக்கும்.

இந்த ஹெல்ப்லைன் நம்பர் பதிவு செய்யப்பட்ட குரல் மற்றும் பதில் அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் பயணிகள் பல்வேறு மொழிகளில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தவிர ரயில் பயணிகள் எஸ்எம்எஸ் மூலமாகவும் ரயில் பயணம் தொடர்பான தகவல்களை பெறலாம். டிக்கெட் கிடைப்பது, ரயில் வருகை, புறப்பாடு,முன்பதிவு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு பயனாளிகள் எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

டோல் ஃப்ரீ நம்பர் சேவையில் எந்த நம்பருக்கு என்ன வசதி என்று கீழே பார்க்கவும்..

நம்பர் 1 – பாதுகாப்பு, மருத்துவ உதவி, விபத்து தகவல் அறிய எண் 1-ஐ அழுத்தவும்.

நம்பர் 2 – ரயில் தொடர்பான விசாரணை

நம்பர் 3 – கேட்டரிங் வசதிகள்

நம்பர் 4 – பொதுவான புகார்கள்

நம்பர் 5 – ஊழல் புகார்

நம்பர் 6 – பார்சல்கள் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணை

நம்பர் 7 – இயக்கப்படும் ரயில்கள் தொடர்பான தகவல்

நம்பர் 9 – நீங்கள் பதிவுசெய்த புகாரின் சமீபத்திய நிலை

Categories

Tech |