மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஊழியர்கள் வீடுகட்ட கிடைக்கும் முன்பணமான ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ், அதாவது வங்கியில் இருந்து வாங்கப்படும் கடனின் வட்டிவிகிதம் 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக்கப்பட்டு உள்ளது. இதற்கென அரசு ஒரு அலுவலக குறிப்பாணையும் வெளியிட்டு இருக்கிறது. அரசின் இம்முடிவால் ஊழியர்களுக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கும். இந்த முடிவின் அடிப்படையில் ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கும், வாங்குவதற்கும் வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை அடைக்க வழங்கப்படும் முன்பணத்திற்கான வட்டி விகிதத்தில் 80 அடிப்படை புள்ளிகள் அதாவது, 0.8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய ஊழியர்களின் சொந்தவீடு கனவு நினைவாகுவது இன்னும் எளிதாகி விடும்.
31 மார்ச் 2023 வரை ஊழியர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், முன் பணத்தின் வட்டி விகிதங்களைக் குறைப்பது பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப்பின் 2023 மார்ச் 31 வரை, பணியாளர்கள் தற்போது வருடத்திற்கு 7.1 % வட்டியில் முன்பணம் பெறலாம். இது முன்பு வருடத்திற்கு 7.9 % ஆக இருந்தது. அரசாங்கத்தால் வழங்கப்படும் இச்சிறப்பு வசதியின் கீழ் மத்திய ஊழியர்கள் 2 வழிகளில் இதனை செய்யலாம். அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் 34 மாதங்கள் வரை (அல்லது) அதிகபட்சமாக ரூபாய் 25 லட்சம் வரை ஊழியர்கள் முன் பணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அத்துடன் வீட்டின் செலவு (அல்லது) ஊழியர்களின் செலுத்தும் திறன் என இரண்டில் ஊழியர்களுக்கு எது குறைவாக இருக்கிறதோ, அத்தொகையை முன்பணமாக எடுத்துக்கொள்ளலாம். மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு வீடுகட்ட முன்பணம் வழங்குகிறது என்பது குறிபிடத்தக்கது. இவற்றில் பணியாளர் சொந்தமாகவோ (அல்லது) மனைவியின் மனையிலோ வீடுகட்ட முன்பணம் எடுத்துக்கொள்ளலாம். இத்திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் துவங்கப்பட்டது. இதன்கீழ் 31 மார்ச் 2023 வரை மத்தியஅரசு தன் ஊழியர்களுக்கு 7.1 % வட்டி விகிதத்தில் வீடுகட்ட (அல்லது) வாங்க முன்பணத்தை வழங்குகிறது.