Categories
உலக செய்திகள்

படகில் வாழ நினைத்த ஜோடிக்கு நேர்ந்த துயரம்…. கடும் புயலில் ஏற்பட்ட விபரீதம்…!!!

ஜெர்மனியில் வசிக்கும் ஒரு தம்பதியர் படகிலேயே வாழ தீர்மானித்த நிலையில், புயலில் சிக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த Annemarie-Karl Frank என்ற தம்பதி படகில் வாழ முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் தங்கள் படகில், அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவரை ஏற்றிக்கொண்டு  பயணித்திருக்கிறார்கள்.

அப்போது, திடீரென்று கடும் புயல் உருவானது. அதில், படகு சிக்கியது. இதனைத்தொடர்ந்து, Annemarie படகில் இருக்கும் பாய் மரத்தை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருக்கு உதவ சென்ற Karl Frank-ம் காயமடைந்தார்.

தம்பதியர் இருவரும் காயமடைந்த உடன் அமெரிக்கர் இருவரும் அவசர உதவிக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, கடலோரக் காவல் படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

எனினும் அதற்குள் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெர்மன் மற்றும் அமெரிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |