குழந்தைகளுக்கு எந்த உணவு என்ற கேள்விக்கு பதிலாகவும் சத்து நிறைந்த உணவாகும் அரிசி பொரி கடலை கஞ்சி…
தேவையான பொருட்கள்
அரிசி – 8 டீஸ்பூன்
பொரிகடலை – 4 டீஸ்பூன்
சுக்கு – ஒரு டீஸ்பூன்
செய்முறை
அரிசியை சுத்தமாகக் கழுவி காயவைத்து அந்த அரிசியை அடுப்பில் கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும் நன்றாக நிறம் மாறி வரும் பொழுது எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் பொரிகடலையையும் பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மற்றும் பொரிக்கடலையை ஒன்றாக சுக்கு சேர்த்து பொடியாக நன்றாக அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் 4 டீஸ்பூன் பொடியை போட்டு கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும்.
10 நிமிடங்கள் கஞ்சியின் பதம் வரும் வரை நன்றாக கிளரவும்.
கஞ்சியின் பதம் வரவும் இறக்கி விடவும்.
ஆறு மாத குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்.
குறிப்பு: அரிசி கைக்குத்தல் அரிசியாக இருந்தால் மிகவும் நன்று.