Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு.. குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.. மன குழப்பம் நீங்கும்..!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று குறைகள் அகல குல தெய்வத்தை வழிபட வேண்டிய நாடாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

இன்று மனக்குழப்பம் அகலும் நாளாகவே இருக்கும். எடுக்கும் காரியம் சிறிது முயற்ச்சிக்கு பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து சீராகும். இன்று பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூட கொஞ்சம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும். கூடுமானவரை பேசும் பொழுது கொஞ்சம் நிதானித்து பேசுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் கொஞ்சம் வரவேண்டியது தாமதப்பட்டு தான் வந்து சேரும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.

யாருக்கும் இன்று ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பஞ்சாயத்துக்களில் ஈடுபடவேண்டாம். பணம் நான் வாங்கி தருகிறேன் என்று எந்தவித ஒப்புதலும் அளிக்காதீர்கள். இன்று  மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும்இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், நினைத்த காரியம் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெளிர் பச்சை

Categories

Tech |