செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், தர்மயுத்தம் தொடங்கியதற்கு பின்னாடி அப்போது ஜூலை மாதம் சந்தித்ததற்கு பின்பு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அன்னைக்கு அவர் துணைவியார் மறைவுக்கு நட்புக்காக போயிருந்தேனே தவிர, என்னுடைய பழைய நண்பர் அவரு. அரசியல் ரீதியாக எங்களுக்குள்ள எந்த தொடர்பும் இல்லை; அந்த மாதிரி ஏதாவது இருந்தா ஓப்பனா சொல்லிடுவேன்.
அம்மாவுக்கு அடுத்து பதவியாக உள்ள பொருளாளர் பொறுப்பிலே இருந்தேன். ஸ்டாலின் அதிமுக அழிஞ்சு போயிரும்னு சொன்னாரு. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நான் சொல்லி அன்றைக்கே சொன்னேன்…. இவர்கள் நயவஞ்சகர்கள்; தவறானவர்கள் கையில் கட்சியும், சின்னமும் சிக்கிக் கொண்டிருக்கிறது.
பாமரர்களுக்கு கூட புரியிற மாதிரி எம்ஜிஆர் உடைய கட்சி இன்றைக்கு அவர் படத்தில் வில்லனாக வருகின்ற வீரப்பா, எம். என். நம்பியார் கையில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது என்று ஒரே வரியில் சொன்னேன். இன்றும் அதுதான் நீடிக்கிறது…
அவர்களுக்குள்ளே நாலு வருடம் பதவியில் இருந்தபோது சண்டை சச்சரவுகள் எல்லாம் காமித்துக் கொள்ளாமல் இருந்தார்கள். இப்போது ஆட்சி போனதுக்கப்புறம் மீண்டும் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்று போட்டியிடுகிறார்கள். இது அவர்கள் செய்கின்ற தவறு; நாம் என்ன பண்ண முடியும். வருத்தம் மட்டும் தான்பட முடியும் என தெரிவித்தார்.