செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கோவை செல்வராஜ், எல்லோரும் சேர்ந்து 2017 இறுதியில் நடந்த பொதுக்குழுவில் என்ன சொன்னோம்? அம்மா இருந்த இடம்; தலைவர் எப்படி இருந்தாரோ அதனால தலைவர் என்றால் இந்த கட்சிக்கு எம்ஜிஆர் தான் என அவை தலைவரை தேர்ந்தெடுத்தாங்க. தலைவராக கட்சிக்கு யாரும் இல்லை.
17 வருஷம் இருந்து கட்சியை நடத்தினார். அதே மாதிரி அம்மா 28 வருஷம் இருந்த காரணத்தினால் அம்மா இருந்த நிரந்தர பொது செயலாளர் எடத்துல வேற யாரும் இருக்கக்கூடாது என்று ஒரு முடிவெடுத்து இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போடணும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பேரும் பதவியை தேர்ந்தெடுத்து, இரண்டு பேரும் சேர்ந்து கட்சியை வழி நடத்துவார்கள் என்று சொன்னார்கள். இந்த ஆறு ஆண்டுகள் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சதிக்கும், இந்த துரோகத்திற்கும் எல்லாம் காரணம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான்.
அதனால அவர்தான் இதெல்லாம் செஞ்சாரே ஒழிய அண்ணன் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாது. இந்த மாதிரி எல்லாம் செய்றாங்க. அதனால இன்றைக்கு அவர் செய்கின்ற அந்த துரோகம்…. கட்சிக்கு செய்கின்ற துரோகம்…. உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இல்லை சின்னம் கிடைக்காத காரணமே எடப்பாடி பழனிசாமி தான்.
29.4.2022-ல தேர்தல் கமிஷன்ல கொண்டு போய் கடிதம் கொடுக்குறாங்க. அதுல எல்லோ நிர்வாகிகளும் முறையாக டிசம்பர் 7ஆம் தேதி, இவர்கள இரண்டு பேரையும் தேர்ந்தெடுக்குறாங்க. அதுக்கு பின்னாடி மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அத்தனை பேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையாக பட்டியலை கொடுத்தாச்சு. எல்லாமே பத்திரிகையில் வெளியிட்டாச்சு. அதற்கு அப்புறம் எதற்காக இன்னும் ஐந்து வருடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை….
நீங்க ரெண்டே மாசத்துல ஒத்த தலைமை, ஒத்த தலைமை என சொல்லி… இது மாதிரி கட்சியில் குழப்பத்தை செஞ்சிட்டு இருக்கீங்க. இந்த கட்சிக்கு நீங்க நிறுவனத் தலைவரா ? இந்த கட்சி நீங்க ஆரம்பிச்ச கட்சியா? எல்லா எடப்பாடி பழனிச்சாமி குடும்ப கட்சியா ? அல்ல கம்பெனியா அது ? எப்ப வேணா யார வச்சிக்கிறது, யார வேணா எடுக்கிறது… ஒருங்கிணைப்பாளரை எடுப்பதற்கு என்ன தகுதி இருக்கு ? அவரை நீக்கியாச்சுன்னு சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கு. ஒன்னுமே கிடையாது இவர் யாரையும் சொல்றதுக்கு என தெரிவித்தார்.