உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவராக நாகர்கோவிலை சேர்ந்தவர் நியமனம் செய்துள்ளனர்.
சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் நடுவர்களில் ஒருவராக நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் ஸ்டெல்லா ஷர்மிளா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போட்டியின் இயக்குனர் பாரத்சிங் சவுகான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தொடர்ச்சியாக உலக இளையோர் செஸ் போட்டியில் நடுவராகவும், காமன்வெல்த் நாடுகளுக்கிடையே நடந்த செஸ் போட்டியின் நடுவராகவும் ஸ்டெல்லா ஷர்மிளா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவர் டெல்லியில் மத்திய அரசு நிறுவன அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.