தமிழகத்தின் திருச்சியில் பிறந்தவர் பாரதியார் ஸ்டேன் சுவாமி. இவர் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோக்கில் செயல்பட்டு வந்தார். எல்கர் பரிஷித் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் இவரும் ஒருவர். இதனால் இவரை கடந்த 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தனது 84 வயதில் கடந்த 2021 ஜூலை 5 ஆம் தேதி காலமானார். அதன் பிறகு இவரது மரணம் குறித்த பாரபட்ச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. பாரதியார் ஸ்டேன் மரணத்திற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் அலுவலகம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதி மற்றும் மனித உரிமைகள் கொள்கை மற்றும் மனிதபிமான உதவிகளுக்கான ஜெர்மன் ஆணையர் ஆகியோர் கவலை தெரிவித்தனர். ஆனால் பாரதியார் ஸ்டேன் சட்டத்தின்படி நடத்தப்பட்டதாக குறி சர்வதேச விமர்சனங்களை இந்தியா நிராகரித்தது.
இந்நிலையில் “இந்தியாவில் மத சிறுபான்மையினர் மற்றும் அவர்களது பாதுகாவலர்களை துன்புறுத்துதல் காவலில் இருந்த ஸ்டானின் மரணத்தை நினைவு கூறுதல்” என்ற தலைப்பில் கதந்த செவ்வாய்க்கிழமை அன்று காணொலி கூட்டம் நடைபெற்றது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவான் வர்காஸ் கூறியது, பாரதியார் ஸ்டேன் சுவாமியின் சேவைகளை கௌரவிக்கும் வகையில், அவர் மறைந்த ஓர் ஆண்டுக்கு பின் இந்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மனித உரிமைகளுக்காக வாதிடு தனி நபர்களை தவறாக நடத்துவதும் சிறையில் அடைப்பது நீடிக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசாங்களுக்கும் இந்த தீர்மான தெளிவுபடுத்தும். மனித உரிமைகள், பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை குறிவைக்க பயங்கிரவாத எதிர்ப்பு சட்டங்களை தவறாக பயன்படுத்துவது குறித்தும் இந்த தீர்மான கவலை தெரிவிக்கிறது . ஆனால் தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் இந்த தீர்மானம் பாராட்டுகிறது.