ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக படக்குழுவிற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை கௌரி கான் தயாரிக்கிறார். இந்நிலையில் வருகிற 2023-ம் ஆண்டு ஜவான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜவான் படத்தில் புதிதாக இணையவுள்ள நடிகர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திர வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக உள்ளது. தற்போது ஷாருக்கான் படத்திலும் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுபற்றி படக்குழுவிற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளதாவது, ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. அவர் படத்தில் நடிக்க இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் மும்பையில் படபிடிப்பில் கலந்து கொள்கின்றார் என்கின்ற தகவல் உண்மையில்லை. அட்லீக்கு எப்படி டேட்ஸ் கொடுப்பது என்று இன்னும் யோசனையில் இருக்கின்றார் விஜய் சேதுபதி. தற்பொழுது நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது என கூறியுள்ளார்.