ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்புவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ராஜூ(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜூ ஆட்டோவுடன் அழகியமண்டபத்தில் நின்று கொண்டிருந்தார். நேற்று காலை மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜூவின் ஆட்டோவிற்கு அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது மர்மமான முறையில் ராஜூ இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜூவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.