Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கணவன்-மனைவி பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் பகுதியில் அன்பு(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செமிதா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று அன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் சாம்பல்பள்ளம் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செமிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அன்பு மற்றும் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |