மீனம் ராசி அன்பர்களே, கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகிச் சென்று அன்பு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் தானே நடந்து முடியும். உத்யோகத்தில் புதிய தொடர்பு கிடைக்கும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை வெளிப்படும். வெளியில் தங்கும் சூழ்நிலை உருவாகும்.
எடுத்த காரியத்தை செய்யும் பொழுது எது சரி, எது தவறு என்ற மன குழப்பம் அவ்வப்போது வந்து செல்லும். உங்களுடைய திறமையால் அதனை ரொம்ப சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மற்றவர் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் கொஞ்சம் கூடும். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும், கவனம் இருக்கட்டும்.
இன்று பேசும்பொழுது கொஞ்சம் நிதானமாகவே பேசுங்கள், இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
வெள்ளை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்