Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ.! ”இவருக்கு உள்ளே ஆள் இருக்கு… DMK அரசுக்கு புது தலைவலி ?

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, எனக்கு அண்ணாமலை மேல ஒரு கோபம் இருக்கிறது எப்பவுமே… கையெழுத்து போடப் போகிறார் ஒருவர். மனலுக்கோ, பாலத்துக்கோ எதுக்கோ இப்போ இருக்கின்ற அமைச்சர் கையெழுத்து போட போகின்றார். 150 கோடி லஞ்சம் வாங்கப் போகிறார்கள் அதில், அந்த விஷயத்திற்கு கையெழுத்து போட்டால் அவருக்கு 150 கோடி. கையெழுத்து போட பேனா கவரை திறக்கிறார் அண்ணாமலை மேடையில் பேசுகிறார்.

இப்போது பேனாவை திறந்து கொண்டிருக்கிறார், அதில் 150 கோடி லஞ்சம் பெற போகிறார், அவன் உடனே பேனாவை முடிவிட்டார். இப்படி எல்லோரையும் கெடுத்துட்டு இருந்தா எப்படி ? கொஞ்சம் விட்டு வையுங்கள். அதில் தான் அவர் கண்டுபிடித்து விட்டார். ஓஹோ இவருக்கு உள்ளே ஆள் இருக்கிறது நிறைய என்று சொல்லி ஒரே நேரத்தில் 46 ஐஎஸ்ஐ மாற்றிவிட்டார். அதன் பிறகு 51 ஐஏஎஸ்ஐ மாற்றிவிட்டார். சரி இப்படி மாற்றினால் அவன் அங்கே போய் நம்ம ஆளாக இருப்பார்களா ? இருக்க மாட்டார்களா? அதை சொல்லுங்க.

தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் தான் ஊடல் ஊழல் நடக்கிறது. அங்கு இருந்து சொல்ல போகிறார்கள் இவரிடம். நான் முதலில் அண்ணாமலையை தலைவராக போட்டவுடன்…  என்ன போலீஸ் ஆபிஸரை போட்டுள்ளார்கள் என்று பார்த்தேன். சரியான போலீஸ் ஆபீஸர் தான், உங்க மேல் இருக்கிற கோபத்தில அங்கேயும் ஒரு போலீஸ் ஆபீசரை சேர்த்து விட்டார்கள், நான் என்ன சொல்கிறேன்….  அவர் அந்த கட்சிக்கு சொந்தம். அந்த கட்சியில் இருப்பவர்களுக்கு சொந்தக்காரர் அவர், இல்லை என்று சொல்ல சொல்லுங்கள்.

ஆனால் அண்ணாமலைக்கு யாரும் சொந்தம் கிடையாது, இந்த கட்சியில் உள்ள தொண்டர்கள் தான் சொந்தம். அதை ஒத்துக் கொள்கிறீர்களா ? இது எல்லாம் நான் சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்வீர்கள், அவர் எப்படி என்னை பற்றி பேசலாம், உன்னை பற்றி பேசலாம் என்று பொதுவா சொல்கிறேன்யா நானு….  ஏன் நான் சொல்கிறேன் என்றால், சகோதரர் அண்ணாமலை அவருக்கு யாரோ செய்தி கொடுக்கிறார்கள். முதலமைச்சர் தவிர மற்றவர்கள் எல்லாம் செய்தி கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரிகிறது. முதலமைச்சர் வேறு எங்கே தேடுகிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |